நடிகை சாந்தினி 
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு- நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் மனு

திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சேர்ந்து வாழ சம்மதித்தேன் என்று நடிகை சாந்தினி கூறி உள்ளார்.

மாலை மலர்

நடிகை சாந்தினியுடன் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும், கொடுத்த கடனை திரும்பக் கேட்டதால் இவ்வாறு அவர் பொய் புகார் கொடுத்துள்ளார் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து   நடிகை சாந்தினி   சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சேர்ந்து வாழ சம்மதித்தேன் என்று அந்த மனுவில் நடிகை சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் புகார் வழக்கில்   முன்னாள் அமைச்சர் மணிகண்டன்   முன் ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.