கைது 
செய்திகள்

உ.பி.யில் ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது

உத்தர பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

மாலை மலர்

ATS, ISI, பயங்கரவாத ஒழிப்புப் படை, ஐஎஸ்ஐ

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோ, ரே பரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பிரயாக்ராஜ் நகரில் இருந்து படையினர் கண்டறிந்தனர். அதன்பின், அந்த வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டது.

இந்த அதிரடி சோதனையில், ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பு ஒன்றை படையினர் கண்டறிந்து, 3 பயங்கரவாதிகளையும் கைது செய்துள்ளனர். இத்தகவலை சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.