விபத்து பலி 
செய்திகள்

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஸ்டோன் அவுஸ் பேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரசாத் (வயது 23). இவருடன் திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீநிதி என்பவர் மொகிலி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் சொந்த வேலையாக சித்தூருக்கு வந்து மீண்டும் நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் மொகிலிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு வேன் சித்தூரை அடுத்த இருவாரம் அருகில் உள்ள கோவில் அருகில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் மீது அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மோதியது. அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அதில் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஜெயப்பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சித்தூர் போக்குவரத்துப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஞ்சநேயலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.