சென்னை:
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,110 கோடி விவசாய கடனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளார்.
இதன் மூலம் இந்த அரசு மக்கள் குறைதீர்க்கும் அரசு என்பதை செயலில் காட்டி உள்ளது. இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.