வாயுக்கசிவு ஏற்பட்ட பகுதி 
செய்திகள்

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் திடீர் வாயுக்கசிவு

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் ரசாயன- தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த ரசாயன தொழிற்சாலையில் இருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் ரசாயன வாயு கலந்த காற்றை சுவாசித்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவை நிறுத்தினர். மேலும், மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்ட மக்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT