அமைச்சர் ஆர்பி உதயகுமார் 
செய்திகள்

தமிழகத்தில் 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

* செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் நிரம்பவில்லை. தற்போதைக்கு ஏரி திறக்கப்படாது.

* செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றில் குறைந்தளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும்.

* மணிமங்கலம், சோமனூரில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

* பேரிடர் காலத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.