நளினி 
செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம் - கவர்னருக்கு எதிராக நளினி வழக்கு

கவர்னருக்கு எதிராக நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு ஒத்திவைத்தனர்.

மாலை மலர்

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 9-9-2018 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் தமிழக கவர்னருக்கு எதிராக நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் முடிவு எடுக்காமல் இருப்பது கோர்ட்டு அவமதிப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நளினி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு ஒத்திவைத்தனர்.