7 அடி உயர வாழைத்தார்கள் 
செய்திகள்

ஏலத்திற்கு வந்த 7 அடி உயர வாழைத்தார்கள்

ஒரு வாழைத்தாரில் 10 முதல் 12 சீப்கள் வரை இருக்கும். ஆனால் இதில் ஒரு வாழைத்தாரில் 18 சீப்களும், எண்ணிக்கையில் 400 வாழைக்காய்களும் இருந்தன.

மாலை மலர்

கரூர்:

கரூர் ரெயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வாழைக்காய் மண்டி ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டம் இடையாரில் இருந்து 7 அடி உயரமுள்ள 2 கற்பூரவல்லி வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்திருந்தன. பொதுவாக ஒரு வாழைத்தாரில் 10 முதல் 12 சீப்கள் வரை இருக்கும். ஆனால் இதில் ஒரு வாழைத்தாரில் 18 சீப்களும், எண்ணிக்கையில் 400 வாழைக்காய்களும் இருந்தன.