உயிரிழப்பு 
செய்திகள்

உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு

கள்ளச்சாராயம் குடித்த பின்னர் இறந்தவர்களில் ஒருவரது உடலை அவர்களின் உறவினர்கள் தகனம் செய்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாலை மலர்

ஹத்ராஸ்:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம், நக்லா சிங்கி கிராமத்தில் உள்ள சிலர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அதன்பின்னர் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘ஒருவர் மருத்துவமனையில் இன்று இறந்துள்ளார். ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் நேற்று இரவே தகனம் செய்துவிட்டனர். 3 உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். 

அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து உறுதியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே தெரியவரும். அவர்களின் உள்ளுறுப்பு பாதுகாக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என கூறினர்.