டாக்டர் 
செய்திகள்

சென்னையில் மினி கிளினிக்குகளுக்கு புதிதாக 42 டாக்டர்கள் நியமிக்கப்படுகிறார்கள்

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக 92 மினி கிளினிக்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டன. இங்கு டாக்டர்கள் பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டன.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு 200 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அனைத்து பகுதி மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன.

இந்த மினி கிளினிக்குகளுக்கு 200-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மினி கிளினிக்குகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே 198 டாக்டர்களின் பட்டியலை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக 42 டாக்டர்கள் பணியில் சேரவில்லை.

இந்த நிலையில் மினி கிளினிக்குகளில் உள்ள டாக்டர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது மருத்துவ அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக 92 மினி கிளினிக்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டன. இங்கு டாக்டர்கள் பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் பல மையங்களில் தடுப்பூசி இல்லை என்று அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இதன் காரணமாக இந்த கிளினிக்குகளுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மினி கிளினிக்குகளுக்கு கூடுதலாக 42 டாக்டர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.