சாராய பாட்டில்கள் 
செய்திகள்

உத்தர பிரதேசத்தில் சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு... 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணம் அடைந்தனர்.

புலந்த்சாகர்:

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் ஜீத்காதி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் வீடு திரும்பி உள்ளனர். வீட்டிற்கு வந்ததும் அவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சாராயத்தால் ஏற்பட்ட மரணம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குற்றம் செய்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சாராய ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT