ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் மரணம் 
செய்திகள்

ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் மரணம் - கேரளாவில் அடுத்தடுத்து நிகழும் வரதட்சணைக் கொடுமை சம்பவங்கள்

விஸ்மயா தற்கொலை வழக்கு கேரளாவை உலுக்கி வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர்  என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார்  வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம்  வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம்  சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார்.

விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா  பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார்  குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.