வேலூர்:
வேலூர் தொரப்பாடி எழில்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). ஒடுகத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய தாமோதரன் திருட்டு நடந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.