ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கன்மோஹ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சரண் அடையும்படி எச்சரித்தனர். ஆனால் சரண் அடையவில்லை.
இதையடுத்து அதிகாலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அல் பதர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காஷ்மீர் ஐஜி விஜய் குமார் உறுதி செய்தார். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
முன்னதாக சோபியான் மாவட்டத்தின் துர்காவங்கம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை போலீசார் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.