தமிழகத்தில் உள்ள 2 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 349 ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா முதல் தவணை நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி கடந்த மே மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
மே மாத இறுதி வரையில் சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகை பெறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் முதல் தவணை நிவாரண தொகையை பெறாதவர்கள் ஜூன் மாதமும் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள 14 வகை மளிகை பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன்
விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் முதல் தவணை நிவாரண தொகை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.