பாபநாசம்:
பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை கிராமத்தில் கீழத்தெருவில் வசித்து வந்த மாதவன் மகள் கனிஸ்ரீ (வயது 16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தனது தந்தையிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அவர் பிறகு வாங்கித் தருகிறேன் என்று கூறியதால் மனமுடைந்த கனிஸ்ரீ வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.