நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள காளிப்பட்டி மதுரைவீரன் காலனியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் பிரபு (வயது 21). கட்டிட மேஸ்திரி. இவர் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபு போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.