தங்கப்பதக்கத்துடன் கரோலினா மரின். 
செய்திகள்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மகுடம் சூடினார்.

மாலை மலர்

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் 42 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து மகுடம் சூடினார். ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.