புதுடெல்லி:
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கேந்திரிய வித்யாலயா தொடக்க நாள் நடந்தது. அதில், மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசியதாவது:- இந்தியாவின் முழு மாற்றத்துக்கு ஐ.ஐ.டி.கள் கருவியாக இருப்பதுபோல், தேச வளர்ச்சிக்கான கருவியாக கேந்திரிய வித்யாலயாக்கள் திகழ்கின்றன. புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் கேந்திரிய வித்யாலயாக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. இது, மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.