கோப்புப்படம் 
செய்திகள்

அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு 94 சதவீத செயல்திறன்

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, 94.1 சதவீத செயல்திறனை கொண்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் உலக நாடுகள் பலவற்றில் தயாரிக்கப்பட்டு, அவை மருத்துவ சோதனையில் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, 94.1 சதவீத செயல்திறனை கொண்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தி நியு இங்கிலாந்து மருத்துவ பத்திரிகை வெளியிட்ட தகவல்கள்படி, 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியோ அல்லது மருந்து போலியோ செலுத்தப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு மட்டுமே லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. 185 பேருக்கு மருந்து போலி செலுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் பிரிகாம் மற்றும் மகளிர் ஆஸ்பத்திரி தொற்று நோய் நிபுணர் டாக்டர் லிண்ட்சே பேடன் கூறுகையில், “ இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில் அது 94.1 சதவீத செயல்திறனை காட்டி உள்ளது. எங்கள் பணி தொடர்கிறது. அடுத்த மாதங்களில் இந்த தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வரையறுத்து கூற எங்களிடம் கூடுதல் தரவுகள் இருக்கும்” என தெரிவித்தார்.