கோப்புப்படம் 
செய்திகள்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் மான்பூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலியானார்கள்.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் மான்பூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலியானார்கள். 7 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் குவாலியரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுராக் சுஜானியா தெரிவித்தார். கள்ளச்சாராயத்தில் விஷத்தன்மை இருந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.