மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை மக்களை வதைத்து வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கும் வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நிபுணர்கள் கூறுவதை பார்க்கும் போது மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 3-வது கொரோனா அலை ஏற்படலாம். மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவற்றில் தற்சார்புடன் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. மே இறுதியில் கொரோனா பாதிப்பு குறையலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜூலை, ஆகஸ்ட்டில் 3-வது அலை ஏற்பட்டால் அது மாநில நிர்வாகத்திற்கு உள்ள சவாலை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.