கோப்புப்படம் 
செய்திகள்

டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சலால் ஆந்தை இறந்தது - பரிசோதனையில் உறுதியானது

டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் காரணமாக ஆந்தை இறந்தது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கி்டையே டெல்லி வனஉயிரியல் பூங்காவில் பழுப்பு நிற ஆந்தை ஒன்று திடீரென இறந்தது. பறவை காய்ச்சல் காரணமாக இறந்ததா என அறிய பறவையின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போபாலில் பரிசோதனை நடந்த நிலையில், பறவை காய்ச்சல் காரணமாக ஆந்தை இறந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பூங்காவில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும், வெளி வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும் பூங்கா இயக்குனர் ரமேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.