செய்திகள்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மே தின வாழ்த்து

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இரவு-பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பவர்களுக்கு மே தினத்தையொட்டி தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள ‘மே தின’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதாரத்துக்கு அடித்தளமாக திகழும் உழைக்கும் மக்களுக்கு மதிப்பு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் மே தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தின் வலிமை என்பது உழைக்கும் மக்கள் அளிக்கும் பங்களிப்பினை சார்ந்தே இருக்கிறது. அதன்படி, கடின உழைப்பு மற்றும் அதற்கான முயற்சிகளுக்கு மதிப்பளித்து தலை வணங்குகிறேன். நமது நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி செல்வதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் உந்து சக்தி மிகவும் இன்றியமையாதது.

அந்தவகையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இரவு-பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பவர்களுக்கும், அந்த முயற்சிக்காக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினருக்கும் மே தினத்தையொட்டி என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள் கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #MayDay #MayDayWishes #BanwarilalPurohit

SCROLL FOR NEXT