செய்திகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் பணத்தை இழப்பது போல் நடித்து போராட்டம்

விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் நேற்று பணத்தை இழப்பது போல் நடித்து போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

புதுடெல்லி:

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நேற்று 87-வது நாளாக நீடித்தது.

ஜப்தி நடவடிக்கையால் நிலத்தை இழந்த விவசாயிகள் தற்போது பணத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து நேற்றைய போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக, பிரதமர் மோடி வேடம் அணிந்த ஒருவர், மற்ற விவசாயிகளை மிரட்டி பணம் பறிப்பது போல நடித்து காண்பிக்கப்பட்டது.