செய்திகள்

தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #DiwaliBonus #EdappadiPalaniswami #TransportEmployees

மாலை மலர்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசுத் துறை மற்றும் பொதுத்துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீத வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.