உடல் உறுப்பு தானம் 
செய்திகள்

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 5-வது முறையாக முதல் இடம்

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வழங்கினார்

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடந்தது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், இணை-மந்திரி அஷ்வினி குமார் சவுபே ஆகியோர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், நோட்டோ இயக்குனர் டாக்டர். வசந்தி ரமேஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.