காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அரசு படைகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனிடையே, பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானில் தங்கள் பிடியில் இருந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 235 பிணைக் கைதிகளை தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் ஜபிகுல்லா அமனி கூறுகையில், “இன்று மாலை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 235 பேர் மிர்ஸாவாலாங் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். உள்ளூர் பெரியவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த விடுவிடுப்பு முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் பத்திரமாக சர்-இ-புல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், அடையாளம் தெரியாத மக்கள் சிலர் இன்னும் பிணைக் கைதிகளாக இருக்கக் கூடும்” என்றார்.