குண்டு வெடித்த பகுதி 
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதல்- 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இன்று மீண்டும் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மாலை மலர்

காபூல்:

அவ்வகையில் இன்று காபூல் நகரில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள ஷாஷ் தரக் பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 25 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதேபோல் திங்கட்கிழமை கிழக்கு காபூல் குடியிருப்பு பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.