காபுல்:
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் உள்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவமும் செயலாற்றி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மேவான்ட் மற்றும் சாரி மாவட்டங்களில் உள்ள 15 சோதனைச் சாவடிகளின்மீது நேற்றிரவு தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 22 போலீசார் பலியாகினர். 15 போலீசார் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தவந்த தீவிரவாதிகளில் 45 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், காயங்களுடன் 35 பேர் பிடிபட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.