ஆப்கானிஸ்தான் ராணுவம் 
செய்திகள்

ஆப்கானிஸ்தான்: ராணுவம் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபதி உள்பட 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகளின் முக்கிய தளபதி உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தஹேர் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள எஸ்கமீஸ் மாவட்டத்தில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலிபான் தளபதி முல்லா அப்துல் சட்டார் உள்பட 8 பயங்காரவாதிகள் கொல்லப்பட்டதாக அம்மாகாண செய்தித்தொடர்பாளர் முகமது ஜவாத் ஹஜாரி தெரிவித்துள்ளார்.