செய்திகள்

ஆப்கானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. #Afganistan #TalibanAttack

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக மிகவும் தீவிரமாக போராடி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், போலீசார் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்களை எதிர்த்து அரசு படைகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதல்களில் பயங்கரவாதிகளும், அவர்களது படைகளும் தகர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலில் 7 போலீசார் வீர மரணம் அடைந்தனர். அதையடுத்து, போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் இந்த பதிலடி தாக்குதலில் 7 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afganistan #TalibanAttack