செய்திகள்

நண்பனை கொன்ற பயங்கரவாதிகள் - பழிவாங்க வந்த தளபதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.