திருபுவனை:
மதகடிப்பட்டு பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 48). டெய்லர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இன்னொரு மகள் வேலை பார்த்து வருகிறார். மகன் படித்து வருகிறான்.
சம்பவத்தன்று மனைவி மற்றும் மகள் வேலைக்கு சென்று விட்டனர். மகன் பள்ளிக்கு சென்று விட்டான். குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மாலையில் மகன் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, குமார் மர்மமான முறையில்இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசார் பிணத்தை கைப்பற்றி புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர், பிரியா, உதவி சப்-இன்ஸ் பெக்டர் ஏகாம்பரம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குமார் எப்படி இறந்தார்? யாரேனும் அடித்து கொன்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews