சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகளில் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையைான சீனதைபேயின் தாய் சு யிங்-ஐ எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் பிவி சிந்து 21-10 என எளிதில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் சீனதைபே வீராங்கனை சிறப்பாக வீசினார். இதற்கு பிவி சிந்தும் ஈடுகொடுத்து விளையாடினார். இறுதியில் சீனதைபே வீராங்கனை 22-20 என வெற்றி பெற்றார். மேலும், 3-வது செட்டை 21-16 எனக்கைப்பற்ற பிவி சிந்து 1-2 என தோல்வியடைந்து காலிறுதியோடு ஆஸ்திரேலிய ஒபனில் இருந்து வெளியேறினார்.