செய்திகள்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் இயக்குனர் டி.ஏ. சேகர் ராஜினாமா

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் இயக்குனர் டி.ஏ. சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாலை மலர்

இதை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சிஇஓ ஹேமந்த் டுயா உறுதிப்படுத்தியுள்ளார். டி. ஏ. சேகர் ராஜினாமா குறித்து ஹேமந்த் டுயா கூறுகையில் ‘‘நாங்கள் சேகர் முடிவிற்கு மரியாதை கொடுக்கிறேன்.

டெல்லி அணியின் விலைமதிக்க முடியாத சொத்தாக இருந்தவர் சேகர். அவர் அணியில் இருந்து வெளியேறுவது பெரிய வெற்றிடம்தான். இவரது இடத்தை நிரப்புவது கடினம் ஆகும்’’ என்றார்.