செய்திகள்

டி20 கிரிக்கெட்: ரிஷப் பந்த் அதிரடியால் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது டெல்லி

சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி தொடரில் ரிஷப் பந்த் அதிரடியால் தமிழ்நாடு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி. #delvtn

மாலை மலர்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் பரத் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் 17 பந்தில் 24 ரன்கள் எடுத்தும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன்ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் வந்த பாபா அபரஜித் 45 ரன்களும், விஜய் சங்கர் 57 ரன்களும் சேர்க்க தமிழ்நாடு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் கெஜ்ரோலியா 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி இறங்கியது. காம்பீர், ரிஷப் பந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காம்பீர் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 33 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷோரே 28 ரன்னும், ராணா 14 பந்தில் 34 ரன்களும் விளாச டெல்லி அணி 15.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.