செய்திகள்

நாகலாந்து முதல்வராக பதவியேற்றார் ஜெலியாங்: ஆளுனர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்

நாகாலாந்தின் புதிய முதலமைச்சராக ஜெலியாங் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுனர் ஆச்சாரியா பதிவிபிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மாலை மலர்

கோஹிமா:

நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள ஆளுனர் மாளிகையில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகாலாந்தின் 12-வது முதலமைச்சராக ஜெலியாங் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுனர் ஆச்சாரியா பதிவிபிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஜெலியாங், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முதல்வராக பதவி வகித்துள்ளார்.