தாக்குதல் 
செய்திகள்

குடிபோதையில் நண்பர்கள் கோஷ்டி மோதல்- 3 பேர் காயம்

தி.நகர் அருகே குடிபோதையில் நண்பர்கள் கோஷ்டி மோதலில் 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

மன்னார்குடியை சேர்ந்தவர்கள் தினேஷ், ஸ்ரீநாத், ஜெயராஜ், ஜீவா, ராஜேஷ், அஜித். இவர்கள் மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.நகருக்கு வந்த போது குடிபோதையில் நண்பர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் தினேஷ், ஸ்ரீநாத், ஜெயராஜ் ஆகியோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.