தற்கொலை 
செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

டி.கல்லுப்பட்டி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

பேரையூர்:

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் முத்து (வயது 51). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவர் பணத்தை வீணாக செலவு செய்து வந்தாராம். இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

சம்பவத்தன்று அதிகமாக மது அருந்திய முத்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி வந்தாராம். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.