செய்திகள்

கைதிகளை கொடூரமாக கொல்லும் 2 பிரிட்டன் ஐ.எஸ். தீவிரவாதிகளை கைது செய்த குர்து போராளிகள்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைது செய்யப்படுபவர்களை சித்ரவதை செய்து கொலை செய்யும் இரண்டு பிரிட்டன் தீவிரவாதிகளை குர்து போராளிகள் கைது செய்துள்ளனர். #Syria #BritishISMilitants #SyrianKurds

டமாஸ்கஸ்:

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இவ்விரு படைகளையும் எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிடிபடும் வெளிநாட்டினர்களை சித்ரவதை செய்து கொலை செய்வதற்காக ஒரு சில சிறப்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழுவினர் கொலை செய்யும் வீடியோக்களை பதிவு செய்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்நிலையில், பீட்டில்ஸ் எனப்படும் நான்கு பேர் அடங்கிய படையை சேர்ந்த இரண்டு பிரிட்டன் ஐ.எஸ். தீவிரவாதிகளை குர்து போராளிகள் கைது செய்துள்ளதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அலெக்சாண்ட்ரா கோடே, எல் ஷபீ எல்ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். #Syria #BritishISMilitants #SyrianKurds #tamilnews

SCROLL FOR NEXT