செய்திகள்

சிட்னி சர்வதேச டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன்

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனையை வீழ்த்தி கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாலை மலர்

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும், ஆஸ்திரேலியாவின் அஷ்லெய்க் பேர்ட்டி-யும் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இதில் கெர்பர் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 2016-ம் ஆண்டு யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்ற பிறகு தற்போதுதான் சுமார் 16 மாதங்கள் கழித்து கெர்பர் பட்டத்தை வெல்கிறார்.

முதல் செட்டில் 3-2 என முன்னிலைப் பெற்றிருந்த கெர்பர் அதன்பின் எளிதாக 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் 1-1 என சமநிலையில் இருந்த பிறகு 6-4 என கைப்பற்றினார்.