செய்திகள்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்ட ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ அறிமுகம்

ஸ்வைப் நிறுவனத்தின் புதிய ஸ்லேட் ப்ரோ டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த சாதனத்தின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

ஸ்வைப் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக டேப்லெட் ந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜி வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்வைப் டேப்லெட் விலை இந்தியாவில் ரூ.8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:
 
- 10.1 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5000 எம்ஏஎச் பேட்டரி
- 5 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி

பிளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்வைப் டேப்லெட் வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது.