இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த சில மாதங்களாக ஸ்வைப் நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஸ்வைப் நிறுவனத்தின் புதுவரவு ஸ்மார்ட்போனாக ஸ்வைப் எலைட் ப்ரோ ஸ்மார்ட்போனாக இணைந்துள்ளது.
எலைட் ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்வைப் நிறுவனத்தின் எலைட் சீரிஸ்-இல் வெளியிடப்பட்டுள்ளது. அழகாக காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அனைவரும் வாங்கக்கூடியதாக இருக்கிறது.
ஸ்வைப் எலைட் ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் எச்டி, 720 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 2500 எம்ஏஎச் பேட்டரி