ஸ்ரீஹரி நடராஜ் 
செய்திகள்

இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தேசிய சாதனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ், தேசிய சாதனையும் படைத்தார்.

மாலை மலர்

உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடிகளில் கடந்து 2-வது தங்கப்பதக்கம் வென்றார்.

ஏற்கனவே 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் 54.07 வினாடிகளில் கடந்து முந்தைய தேசிய சாதனையான 54.10 வினாடியை முறியடித்தார்.

உஸ்பெகிஸ்தான் ஓபன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 18 தங்கம், 7 சில்வர், நான்கு வெண்கல பதக்கம் என 29 பதக்கங்கள் வென்றது.