செய்திகள்

நீச்சல் பழகியபோது பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

பாடாலூர் அருகே கல் குவாரியில் நீச்சல் பழகியபோது பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

மாலை மலர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் அணிக்கேஸ் (வயது 11) அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாரியப்பன் தனது மகனை பாடாலூர்-இரூர் இடையே உள்ள ஒரு கல் குவாரிக்கு நீச்சல் பழகுவதற்காக அழைத்து சென்றார். 

அங்கு அணிக்கேஸ் கல் குவாரியில் நீச்சல் பழகி கொண்டிருந்தான். மாரியப்பன் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அணிக்கேஸ் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அணிக்கேஸ் உடலை மீட்டார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். #tamilnews