செய்திகள்

அடுத்த தீபாவளியை ராமர் கோவிலில் கொண்டாடப் போகிறோம்: சுப்ரமணியன் சுவாமி

அடுத்த தீபாவளியை அயோத்தி ராமர் கோவிலில் கொண்டாட வாய்ப்புள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மும்பை:

அடுத்த தீபாவளியை அயோத்தி ராமர் கோவிலில் கொண்டாட வாய்ப்புள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அடுத்த தீபாவளி பண்டிகையை அயோத்தி ராமர் கோவிலில் கொண்டாட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், வரவுள்ள தீபாவளி பண்டிகையை நிச்சயம் ராமர் கோவிலில் கொண்டாட வாய்ப்புள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கோவில் கட்டுவதற்கான மூலப்பொருள்கள் தயாராக உள்ளன.

சுவாமி நாராயண் கோவிலை போலவே அனைத்து உள் கட்டமைப்புகளை பொருத்தினால் கோவில் தயாராகி விடும்.

ராமர் கோவில் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. தினமும் விசாரணை நடைபெறும் என்பதால் விரைவில் கோர்ட் தீர்ப்பு வந்துவிடும். ராமர் கோவில் தொடர்பான வ்ழக்கில் நாம் தான் நிச்சயம் வெற்றி பெறப்போகிறோம் என தெரிவித்துள்ளார்.