செய்திகள்

சத்துணவு சாப்பிட்ட 26 மாணவர்கள் பாதிப்பு: பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு

கும்மிடிப்பூண்டி அருகே சத்துணவு சாப்பிட்ட 26 மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்பட 2 பேரை சஸ்பேண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

திருவள்ளூர்:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குமாரநாயக்கன் பேட்டையில் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி உள்ளது.

கடந்த 16-ந் தேதி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 26 மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை கள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் சரோஜா சந்தித்து ஆறுதல் கூறினார்.

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டிருந்தார்.

சம்பவத்தன்று தகவலின்றி பணிக்கு வராமல் இருந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் (பொறுப்பு) ஜெயசீலி, பணியில் கவனக்குறைவாக இருந்த வஞ்சிரம் ஆகிய 2 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #tamilnews