பீகார் மாநிலத்தில் உள்ள மதுபாணி மாவட்டத்தில் காந்தப் பண்புகளைக் கொண்ட 13 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்று வயல்வெளிப் பகுதியில் விழுந்துள்ளது.
உரத்த சத்தத்துடன் படுவேகமாக வந்து விழுந்து, பூமிக்குள் புதைந்த அந்த விண்கல்லை அருகே வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த விவசாயிகள் பார்த்தனர்.
இந்த விண்கல் முதலில் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது. முதல்வர் நிதிஷ் குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.