போதை மருந்து 
செய்திகள்

போலீசாரை தாக்கிய போதை மருந்து கும்பல்- வீடியோ

அரியானாவில் போதை மருந்து வியாபாரிகளை பிடிக்கச் சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியானா மாநிலத்தில் போதை மருந்து விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடத்தி, போதைப் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், போதை மருந்து வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்நிலையில், சிர்சா மாவட்டம் தேசு யோதா கிராமத்தில் போதை மருந்து விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி பதிண்டா போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட நபர், தனது காலணியை கழற்றி காவலரை அடித்துள்ளார். இந்த தாக்குதலில் போலீஸ் தரப்பில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.